சூர்யாவுக்கு ஆதரவாக வைரலாகும் ஹேஷ்டாக்

சென்னை: ‘உயிர்பயத்தால் கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமின்றி தேர்வெழுத சொல்கிறது’ என்று நடிகர் சூர்யா  அறிக்கை விட்டதால் அவர் மீது நீதிமன்றம் அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உயர்நீதி மன்ற தலைமை  நீதிபதிக்கு கடிதம் எழுதினார். சூர்யா மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று முன்னாள் நீதிபதி சந்த்ரு உள்ளிட்ட 5 நீபதிகள் கடிதம் எழுதினர்.

இந்த நிலையில் சூர்யா ரசிகர்கள் ‘டிஎன்ஸ்டேண்ட்வித்சூர்யா’ என்ற ஹேஷ்டாக்கை டிவிட்டரில் உருவாக்கி அதனை டிரெண்டாக்கி உள்ளனர். இதனை  பிரபல நடிகர்களும், இயக்குனர்களும், சமூக ஆர்வலர்களும் பகிர்ந்து வருகிறார்கள்.

 பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து பொது வெளியில் பேசிய வீடியோவையைவும் வைரலாக்கி  வருகிறார்கள். ‘’நீட் மனுநீதி தேர்வு’’ என்ற சூர்யாவின் வரிகளையும் பகிர்ந்து வருகிறார்கள். போலீசில் புகார்: நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி,  மதுரை மாநகர் போலீஸ் கமிஷனரிடம் வக்கீல் முத்துக்குமார் புகார் அளித்துள்ளார். ‘நீதிமன்றத்தின் கண்ணியத்தையும், மாண்பையும் சீர்குலைக்கும்  வகையில் கருத்து தெரிவித்துள்ள சூர்யா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் கூறியுள்ளார்.

Related Stories: