அரியர் தேர்ச்சி பிரச்னையில் அரசு நடத்தும் கேலிக்கூத்து 4.5 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: கல்வித்திட்டமே இந்த லட்சணத்தில் இருக்கும்போது புதிய கல்விக்கொள்கையாம் கத்திரிக்காயாம் என சமூக ஆர்வலர்கள் விமர்சனம்

கொரோனா நோய்த் தொற்றின் எதிரொலியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து இறுதி செமஸ்டர் தேர்வை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண் முந்தைய செமஸ்டர் தேர்வுகளின் அடிப்படையிலும், உள் மதிப்பீடு அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தேர்ச்சி பெறாமல் பாக்கி வைத்திருக்கும் பாடங்கள் (அரியர்) மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், அந்த தேர்வுகளை எழுதுவதற்காக கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் அனைவரும் பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் என அரசு அறிவித்தது. இதனால் கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்திருந்த மாணவர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடினர். சிலர் ஒருபடி மேலே சென்று முதல்வரை பாராட்டி பேனர் எல்லாம் வைத்தனர். ஆனால் பொறியியல் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) மூலம் பேரிடி விழுந்தது. அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது. தேர்வு நடத்தித்தான் பட்டம் வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. இதற்கு தமிழக அரசு தெளிவான விளக்கம்  ஏதும் அளிக்கவில்லை.

பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஏ.ஐ.சி.டி.இ விதிமுறைகளுக்கு உட்பட்டே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக கூறியது. அரியர் விவகாரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளால் இப்போது பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த குழப்பத்தால் அரியர் வைத்துள்ள 4.5 லட்சம் பொறியியல் மாணவர்கள் தங்கள் எதிர்காலம் என்னாகுமோ என்ற தவிப்பில் உள்ளனர். கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலையில் தமிழக அரசு முடிவெடுத்து மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடி வருகிறது என சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர். இந்த லட்சணத்தில் புதிய கொள்கையாம் கத்திரிக்காயாம் என்றும் விளாசுகின்றனர். இந்த விவகாரம் குறித்த நான்கு பேரின் விமர்சனம் இங்கே:

Related Stories: