நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி சென்னை முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 109 பேர் கைது

சென்னை:. நீட் தேர்வால் மனமுடைந்து தமிழகத்தில் இதுவரை  12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் நேற்று திமுக உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. சூளை பஸ் ஸ்டாப் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மஞ்சுளா தலைமைலும்,  வில்லிவாக்கம் மார்க்கெட் அருகே வில்லிவாக்கம் பகுதி செயலாளர் ரித்திதேல் தலைமையிலும், சைதாப்பேட்டை சின்னமலை அருகே தென் சென்னை மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையிலும், அமைந்தகரை ஸ்கைவாக் அருகே பார்த்திபன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

தடையை மீறி நடைபெற்ற போராட்டத்தால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் அமைந்தகரை பகுதியில் நடந்த போராட்டத்தில் 25 ேபரும், வில்லிவாக்கத்தில் நடந்த போராட்டத்தில் 9 பேரும், சூளை பகுதியில் நடந்த போராட்டத்தில் 25 பேரும், சைதாப்ேபட்டை சின்னமலை பகுதியில் நடந்த போராட்டத்தில் 50 பேர் என மொத்தம் சென்னை முழுவதும் 109 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது தடை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, 144 தடை உத்தரவை மீறியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: