விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் தொடரும் முறைகேடு.: வேளாண் துறை இணை இயக்குனர் மீது சிபிசிஐடி நடவடிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் உழவர் உதவி தொகை திட்டத்தில் 3.20 லட்சம் போலி பயனாளிகள் பணம் பெற்றுள்ளதால் வேளாண் இணை இயக்குனர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் கோடிக்கணக்கில் முறைகேடாக பணம் பெற்று இருப்பது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.18 கோடி முறைகேடு நடைபெற்று உள்ளதை தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3.20 லட்சம் போலி பயனாளிகள் பணம் பெற்றுள்ளனர்.

இது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெயக்குமார் நாமக்கல் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து மட்டும் போலி பயனாளிகள் வங்கி கணக்கில் இருந்து 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உழவர் உதவி தொகை திட்டத்தில் நடந்த முறைகேட்டில் தொடர்புடைய அரசு அதிகளிகள் மீது சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகினறனர்.

Related Stories: