வேலை வாங்கி தருவதாக 1.86 கோடி மோசடி வழக்கு எம்டிசி மேலாண் இயக்குநர் கணேசனிடம் 7 மணிநேரம் விசாரணை

* செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டிலும் சோதனை

* மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக 1.86 கோடி மோசடி வழக்கில் மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்  கணேசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அருள்மொழி என்பவர்  புகார் அளித்தார். அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 1.86 கோடி மோசடி ெசய்ததாக தெரியவந்தது. அதை  தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் ெசந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரை கைது ெசய்யவும்  நடவடிக்கை எடுத்தனர். ஆனால், செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கரூர், சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜி வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.  அந்த சோதனையில் மோசடிக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 அதேநேரம், இந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ெசந்தில் பாலாஜி தன்னை விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல்  செய்து இருந்தார். ஆனால், நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க முடியாது என்று கூறியிருந்தது.இந்நிலையில் அடுத்த மாதம் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் இந்த மோசடி வழக்கு தற்ேபாது  சூடுபிடித்துள்ளது.இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் சென்னை ஜெ.ஜெ. நகரில் வசித்து வரும் மாநகர போக்குவரத்து  ேமலாண் இயக்குநர் கணேசன் வீட்டில் நேற்று காலை 11 மணி முதல் விசாரணை நடத்தினர்.

7 மணி நேரம் நடந்த விசாரணையில் மோசடி  ெதாடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு மேலாண் இயக்குநர் கணேசன் அளித்த பதிலை மத்திய குற்றப்பிரிவு  போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.  அதேநேரம் கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் ெசந்தில் பாலாஜி வீட்டிலும் மத்திய குற்றப்பிரிவு  போலீசார் சோதனை நடத்தினர்.

Related Stories: