நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வை நாடு முழுவதும் வருகிற 13-ம் தேதி நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை ஏற்பாடுகள் செய்து வருகின்றது. ஆனால் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த தேர்வை நடத்துவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவல் குறையும் வரை தேர்வை ஒத்திவைக்குமாறு அரசியல் கட்சிகள், மாணவர்கள், பெற்றோர் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.

Related Stories: