பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்குவது எப்போது?: விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறது தமிழக அரசு

சென்னை:  பள்ளிகளில் எப்போது நேரடி வகுப்புகளை தொடங்குவது? என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய, நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளி வகுப்புகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. எனினும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் நேரடி வகுப்புகளை எப்போது தொடங்குவது? குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளும், அதனைத்தொடர்ந்து படிப்படியாக இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே விருப்பப்படும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசும் கூறியுள்ளது. மேலும் வரும் 21ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை கேட்டறியலாம் என்றும், பெற்றோர் சம்மதத்துடன் பள்ளிக்கு செல்லலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே சமூக இடைவெளியுடன் மாணவர்களை வகுப்புகளில் அமர வைப்பது, சுழற்சி முறையிலான வகுப்புகளை நடத்துவது குறித்தும் அரசு அறிவிப்பில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: