போலி நகைகள் மூலம் வங்கியில் ரூ.1.20 கோடி மோசடி நகை மதிப்பீட்டாளர், காதலி கைது

சென்னை: சென்னை நந்தனம் சிண்டிகேட் வங்கியில் மூத்த கிளை மேலாளராக பணிபுரிபவர் பொலுகரி பிரவீன் குமார். இவர், மத்திய குற்றப்பிரிவு போலீசில் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், பொதுமக்களிடம் கோல்டு லோனுக்காக பெற்ற தங்கத்தை கடந்த 30ம் தேதி வங்கி அலுவலர்கள் சோதனை செய்தபோது போலி நகைகளை கொடுத்து ரூ.1.20 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. 2018 முதலே வங்கியில் மோசடி நடந்து வந்துள்ளது. கடந்த மாதம் நகை மதிப்பீடு செய்தபோது தான் இது வங்கி மேலாளருக்கு தெரியவந்துள்ளது. மேலும் போலி நகைகள் அனைத்தும் வங்கியில் வேலை பார்க்கும் நகை மதிப்பீட்டாளரான திருவல்லிக்கேணியை சேர்ந்த முரளி மூலமாகவே நடந்ததும் தெரியவந்தது என குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் நகை மதிப்பீட்டாளரான முரளி தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மூலம் போலி நகை பெற்று பணம் கொடுத்துள்ளார். இதேபோல நகை மதிப்பீட்டாளர் முரளி தனது நண்பர்கள் உறவினர்கள் மூலம் 101 முறை போலி நகைகளை பெற்றுக் கொண்டு ரூபாய் 1.20 கோடி பணம் கொடுத்ததும் மேலும் தனக்கென ஒரு கமிஷன் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை கொடுத்து இதுபோன்று மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு நகை மதிப்பீட்டாளர் முரளி மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவருடைய காதலி சாந்தியை கைது செய்தனர். மேலும் இதைப்போன்று வேறு எங்கேயும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: