நாற்றுநட இயந்திர நடவுமுறை: வேளாண்மைத்துறை அறிவுறுத்தல்

பொன்னேரி: மீஞ்சூர் வேளாண்மை உதவி இயக்குனர் டில்லிகுமார் வெளியிட்ட அறிக்கை: மீஞ்சூர் வட்டார பகுதிகளில் தற்போது சம்பா பயிரிடுவதற்கு விவசாயிகள் நாற்று விடும் பணிகள் துவங்க உள்ளது. விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை போக்கவும், சாகுபடி செலவு குறைவினால் அதிக மகசூல் பெறவும் இயந்திர நடவு முறையை பயன்படுத்தினால் விவசாயிகள் பெரும் லாபத்தை ஈட்டலாம்.

இயந்திர நடவு செய்வதன் மூலம் விதை நெல் ஏக்கருக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை போதுமானது. நாற்றங்கால் மூலம் விதைநெல் பயன்படுத்தினால் விவசாயிகள் பெரும் லாபத்தை பெறலாம். எனவே இதனை பயன்படுத்தினால் அதிக லாபம் கிடைக்கும்.

Related Stories: