புதிதாக 5,584 பேருக்கு கொரோனா தமிழகத்தில் ஒரே நாளில் 6,500 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் ஒரு நாளில் 5,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து சுகாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று 82,573 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,584 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில்- 993, செங்கலப்பட்டு-237, காஞ்சிபுரம்-171, திருவள்ளூர்-281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் மொத்தமாக 4 லட்சத்து 80 ஆயிரத்து 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 89 ஆயிரத்து 777 ஆண்கள், 1 லட்சத்து 90 ஆயிரத்து 718 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 6,516 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 231 பேர் குணமடைந்துள்ளனர். 49 ஆயிரத்து 203 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 14 பேர், திருவள்ளூரில்-9, செங்கல்பட்டு 4 பேர் என 78 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 2 பேர் கொரோனா தொற்றால் மட்டும் மரணமடைந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் ஒருவரும், தனியாரும் மருத்துவமனையில் ஒருவரும் மரணமடைந்துள்ளனர். 76 பேர் இணை நோய்களுடன் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். இவற்றில் 56 மரணங்கள் அரசு, ரயில்வே மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளது. 20 மரணங்கள் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதைச்சேர்த்து தமிழகத்தில் மொத்தம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,090 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கு மேல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இதன்படி தற்போது 49 ஆயிரத்து 203பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: