நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க மாநில, மாவட்ட வாரியாக குழு அமைப்பு: சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க மாநில, மாவட்ட வாரியாக குழு அமைத்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்திற்கு கடந்த வாரம் தமிழக ஆளுநர் அனுமதி அளித்தார். இந்நிலையில் அபராதம் விதிப்பது மற்றும் இதை அமல்படுத்துவது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநில அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் இணை இயக்குநர் கண்காணிப்பு அதிகாரியாக செயல்படுவார். மாவட்ட அளவில் பொது சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் கண்காணிப்பு அதிகாரியாக செயல்படுவார். பொது சுகாதாரத்துறையில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு குறையாத அதிகாரி, உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதார ஆய்வாளர் பதவிக்கு குறையாத அதிகாரி, காவல் துறையில் உதவி ஆய்வாளர் பதிவிக்கு குறையாத அதிகாரி, வருவாய் துறையில் வருவாய் ஆய்வாளர் பதவிக்கு குறையாத அதிகாரிகள் அபராதம் விதிக்கலாம். அபராதம் விதித்தது தொடர்பாக ஆவணங்களை மாவட்டம், மாநிலம், மற்றும் கள் வாரியாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: