டிஜிட்டல் நிறுவனங்கள் வாரக் கட்டணம் வசூலிக்க கடும் எதிர்ப்பு: திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா கடிதம்!!!

சென்னை:  டிஜிட்டலில் திரைப்படம் வெளியிட கியூப்., யூ.எப்.ஓ., நிறுவனங்கள் வாரக் கட்டணம் வசூலிப்பதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். கடிதத்தில், சங்கத்தை சேராத தயாரிப்பாளர்களும் கையெழுத்திட்டுள்ளனர். அதில், புரொஜெக்டர் முதலீட்டுக்கும் அதிகமாக கியூப்., யூ.எப்.ஓ., நிறுவனங்கள் வாரக் கட்டணம் வசூலித்திருப்பதால், இனி தயாரிப்பாளர்கள் வாரக் கட்டணம் செலுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர  திரையரங்குகளில் காட்டப்படும் விளம்பர வருமானம் மற்றும் ஆன்லைன் டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகையையும் சம்மந்தப்பட்ட பட தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பங்கு தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது தயாரிப்பாளர்கள் கூடி முடிவெடுத்துள்ள இந்த கோரிக்கைகளை திரையரங்கு உரிமையாளர்கள் பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள பாரதிராஜா இல்லையென்றால், புதிய படங்கள் வெளியிடுவதில் சிக்கல் எழும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே ஒப்பந்தம் மிக அவசியம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: