அரியர்ஸ் விவகாரம் தொடர்பாக வெளியான ஏஐசிடிஇ கடிதத்தின் நம்பகத்தன்மையில் சந்தேக​ம் உள்ளது : கொளுத்திப் போட்ட அமைச்சர் ஜெயக்குமார்!!

சென்னை : அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது அரசின் முடிவு, இதில் எந்த குழப்பமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரியர் தேர்ச்சி விவகாரத்தில், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுப்பியதாக இன்று இ-மெயில் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என்றும் உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அந்த இ-மெயில் போலியானதாக இருக்கலாம் என்றும் தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரும், அரியர்ஸ் விவகாரம் தொடர்பாக வெளி யான ஏஐசிடிஇ கடிதத்தின் நம்பகத்தன்மையில் சந்தேக​ம் உள்ளது என்று தெரிவித்து உள்ளார். மேலும் பேசிய அவர், அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது அரசின் உறுதியான முடிவு, இதில் எந்த குழப்பமும் இல்லை.அரியர்ஸ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அரசாணை வெளியிட முடியவில்லை.  அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் அரசு சொல்வதும் அமைச்சர் சொல்வதும் மட்டுமே உண்மை நிலவரம்.அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் எங்களுக்கு எந்த மின்னஞ்சலும் வரவில்லை.அதிமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளது. அதற்காக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறோம், என்றார்.

Related Stories: