சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக அவை உரிமைக்குழு கூட்டம் நடந்தது

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பாக துணை சபாநாயகர் தலைமையில் அவை உரிமைக்குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 2017ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா தாராளமாக கிடைப்பதாக திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினர். இதை நிரூபிக்கும் வகையில் சட்டப்பேரவைக்குள் எதிர்க்கட்சியினர் குட்காவை கொண்டு வந்து காட்டினர். இது தொடர்பாக அவை உரிமைக்குழு திமுக உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து திமுக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கடந்த 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. குட்கா சம்பந்தமாக வழக்கு விசாரணை  கடந்த மாதம் 25ம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, “திமுக  எம்எல்ஏக்கள் மீது உரிமை குழு நடவடிக்கை எடுக்க முடியாது. ஏற்கனவே அனுப்பிய  நோட்டீசில் தவறுகள் உள்ளது. தேவைப்பட்டால் புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம்”  என்று கூறி இருந்தது. இந்த நிலையில் அவை உரிமைக்குழு கூட்டம் நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. அவை உரிமைக்குழுவில் 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின் மற்றும் ரகுபதி ஆகியோர் பங்கேற்றனர். அதன் அடிப்படையிலேயே நேற்று தலைமை செயலகத்தில், அவை உரிமைக்குழு கூட்டம் நடந்தாக கூறப்படுகிறது.

Related Stories: