அறிவிப்பு இல்லாததால் அரசு பஸ்சில் செல்லாத விமான பயணிகள்

சென்னை: தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இரவு நேரங்களில் வந்தே பாரத் மீட்பு விமானங்கள் வரும் நேரங்களில் சென்னை சர்வதேச விமான நிலையம் வருகின்றன. தினமும் 4 பஸ்கள் வருகின்றன. அவைகளில் 2 பஸ்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக கன்னியாகுமரி வரையும், ஒரு பஸ் சேலம், ஈரோடு வழியாக கோவைக்கும், மற்றொரு பஸ், இசிஆர் வழியாக நாகப்பட்டினம் வரையும் செல்கின்றன. இதில் ரூ.1,000, ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு பஸ்சில் 30 பயணிகளை ஏற்றுகின்றனர். இந்த பஸ்கள் இயக்கம் பற்றி முறையான அறிவிப்புகள் செய்யப்படாததால், பலருக்கு இந்த பஸ்கள் பற்றி தெரியாமல வாடகை கார், வேன்களிலேயே பயணிக்கின்றனர். இதனால் பஸ்கள் குறைந்த பயணிகளுடன் இயக்கப்படுகிறது.

Related Stories: