மாநிலங்களின் நிதி நிலையை அழித்துவிட்டது: பொருளாதார சரிவுக்கு ஜி.எஸ்.டி முக்கிய காரணம்...பிரதமர் மோடி அரசு மீது ராகுல்காந்தி கடும் விமர்சனம்!

டெல்லி:  நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பதற்கு ஜி.எஸ்.டி முக்கிய காரணம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு  தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட நாட்களிலிருந்தே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி பல பதிவுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக ஒரு பதிவில் பயங்கரவாத கப்பார்சிங் வரி உலக அளவில் விமர்சிக்கப்படுகிறது. இது உலகிலேயே உயர்ந்த வரிகளில் 2வது இடத்தை பிடிக்கிறது.

மிகவும் மோசமானதில் இதுவும் ஒன்றாகும் என உலக வங்கி கூறியுள்ளது. இவ்வாறு ஜி.எஸ்.டி., வரி குறித்து அவர் விமர்சித்துள்ளார். இந்த நிலையில் தற்போது, மோடி அரசை விமர்சித்து அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, திட்டமிட்ட ஜி.எஸ்.டி-க்கும், மோடி அரசு அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி-க்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கியுள்ளார்.

அதாவது கொரோனா பேரிடர் காலத்திலும் ஒழுங்கான நடைமுறையை பின்பற்றவில்லை என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, மோடி அரசு நடைமுறைப்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி வரியானது சிறு தொழில்கள், கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் மாநிலங்களின் நிதி நிலையை அழித்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: