×

க்யூப் பில்டிங்

நன்றி குங்குமம் தோழி

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடி லெய்ட் நகரிலிருந்து சுமார் 45 நிமிட பயணத்தில் இந்த ரூபிக் க்யூப் பாணி கட்டிடத்தை அடையலாம். செஸ்டர் ஆஸ்லோ என்ற ஒயின் தயாரிப்பு குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு ஏற்பட்ட வித்தியாசமான ஆசையின் விளைவுதான் இந்த ரூபிக் க்யூப் கட்டிடம். 2014ல் ஆரம்பித்து கட்டப்பட்ட இதில் மொத்தம் ஐந்து மாடிகள். கடைசி இரு மாடிகளை ரூபிக் க்யூபை திருப்புவோமே அதைப்போல அமைத்துள்ளனர். அது சுற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலை நாடுகளில் ஒயின் தொழிற் சாலைகளுக்கு விஜயம் செய்து அது எப்படி தயாரிக்கப்படுகிறது? டேஸ்ட் செய்யும் வசதி மற்றும் அது பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள பலர் துடிப்பர். இதற்கென சுற்றுலா ஏற்பாடுகளும் உண்டு. இதனுள்  ஒயின் அருங்காட்சியகம், ஒயின் மூடுபனி அருங்காட்சியகங்கள் உண்டு. ஒயின் தயாரிக்கப்படும் போது மூடுபனி மாதிரி புகையும், மூக்கை துளைக்கும் மது வாசனையும் உருவாகும்.

இதனை சுற்றுலாக்காரர்கள் ரசிக்க ஏதுவாய் தனி அறை அமைத்துள்ளனர். அதற்குள் சென்றால் ஒயின் மூடுபனியை திறந்து விடுவர். அது வெள்ளை ஒயின், சிவப்பு ஒயின் ஆகியவற்றின் நறுமணத்தை தரும். இங்கு குழந்தைகளுக்கு தனி அறை உண்டு. குழந்தைகளுக்கு மது மணம் இல்லாத மூடுபனியை செலுத்தி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துவர். மற்றொரு மாடியில் செயற்கை பழங்கள், பூக்களை அமைத்திருப்பர்.

அத்துடன் ஒயின் வாசனையை நுகர்ந்து அலுத்தவர்களுக்கு 30 வகையான சென்ட் வாசனைகளை நுகர வாய்ப்பு செய்து தருவர். மற்றொன்றில் வீடியோ ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்திருப்பர். சுற்றி ஒயின் தோட்டமும், காலடியில் திராட்சையும் டிஸ்ப்ளே ஆகி நுழைந்தவர்களை திகைக்க வைக்கும். மற்றொரு பகுதியில் சிற்பங்கள் மற்றும் பல கலை அம்ச ஐயிட்டங்களை காணலாம். இந்த கட்டிடத்தின் உள்ளேயே வாய்க்கு ருசியாய்  சாப்பிட ஹோட்டல் உண்டு. அலுவலகம் மற்றும் விற்பனை பகுதியும் கட்டிடத்தினுள் உண்டு. பலவகையான முகமூடிகளையும் இங்கு ரசிக்கலாம்.

- ராஜிராதா, பெங்களூரு

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!