நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அரை மணி நேரம் ஒதுக்கீடு!!!...எதிர்க்கட்சியின் தொடர் கண்டனத்திற்கு பணித்தது மத்திய அரசு!

டெல்லி:  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு ஒரு முறை நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் நடைபெறும் இந்த தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தனி நபர் மசோதா தாக்கல் செய்யவும் அனுமதி இல்லை என்றும், கேள்வி நேரத்திற்கு பிந்தைய ஜீரோ நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலாளர்கள் அறிவித்திருந்தனர்.

தொடர்ந்து, சனி மற்றும் ஞயிற்று கிழமைகளில் விடுமுறை இன்றி கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கும், ஜீரோ நேரம் குறைக்கப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினர். இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அரை மணி நேரம் மட்டும் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் இவற்றில் எழுத்துபூர்வமான கேள்விகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், துணை கேள்விகளுக்கு அனுமதி கிடையவே கிடையாது என திட்டவட்டமாக மக்களவை மற்றும் நாடாளுமன்ற செயலகங்கள் அறிவித்துள்ளனர். இதனை வரவேற்றுள்ள எதிர்க்கட்சிகள் கேள்வி நேரத்தை மேலும் 30 நிமிடங்களுக்கு நீடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: