சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: விதிமுறைகளில் தளர்வே காரணம்

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும், விமான சேவைகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. நேற்று பயணிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்தது.

விமானங்களின் எண்ணிக்கையும் 90 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முதல் சென்னையிலிருந்து கண்ணூர், வாரணாசி, லக்னோ ஆகிய இடங்களுக்கு புதிதாக உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் 45 விமானங்களில் பயணிக்க 4,400 பேரும், சென்னைக்கு வரும் 45 விமானங்களில் 6 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 10,400 பேர் பயணிக்கின்றனர். சென்னையிலிருந்து புறப்பட்டு செல்லும் பயணிகளை விட வெளிமாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளன. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு மகிழ்ச்சியை அளித்தாலும், ஊரடங்கிற்கு முன்பு இருந்த நிலையை அடைய இன்னும் பல மாதங்களாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் மட்டும் புறப்பாடு 196 விமானங்கள், வருகை 196 விமானங்கள் மொத்தம் 392 விமானங்களில் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமானவா?கள் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: