சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு...: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு

சென்னை: சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரபல ரவுடியான ரவுடி சங்கர் மீது பல்வேறு கொலை முயற்சி, கஞ்சா வழக்குகள் உள்ளன.  மேலும் அந்த பகுதியில் மாமூல் வசூலித்தல், கட்டப்பஞ்சாயத்து என அடாவடி செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, அவரை பிடிக்க காவல்துறையினர் திட்டம் தீட்டி வந்தனர். ஆனால், அவர், காவல்துறையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து, ரவுடி சங்கரை பிடிக்க அயனாவரம் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான தனிப்படை அடைத்து அவரை பிடிக்க தேடி வந்தனர். கடந்த மாதம் 21 ஆம் தேதி சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா வியாபாரி சங்கரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் முதல்நிலை காவலர் முபாரக்கை அரிவாளால் வெட்டியதால் ரவுடியை ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக்கிற்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. சுட்டுக்கொல்லபட்ட ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகள் உள்ளன. 5 முறை வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரவுடி வெட்டியதாக கூறப்படும் முதல்நிலை காவலர் முபாரக் உள்ளிட்ட 4 காவலர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டர். இருப்பினும்  ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டது. மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரைத்தது. இந்த நிலையில், ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: