தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகியுள்ளது... 60 தொகுதிகளில் நின்றாலே பாஜக வெற்றி பெறும் சாத்தியம் உள்ளது: பாஜக தலைவர் எல். முருகன் நம்பிக்கை!!

கோவை: தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகியுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோவையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகம் தான் அதிகம் பலன் அடைந்துள்ளது.தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகி உள்ளது.சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் பேரவையில் பாஜக உறுப்பினர்கள் கணிசமான அளவில் இருப்பர். 60 தொகுதிகளில் நின்றாலே பாஜக வெற்றி பெறும் சாத்தியம் உள்ளது. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை; பாஜகவின் பலம் அதிகமாகி உள்ளது. ரஜினி ஒரு தேசியாவாதி, ஆன்மீகவாதி அவர் கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும்.சசிகலா சொத்து முடக்கத்தில் சட்டம் அதன் கடமையை செய்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், கூட்டம் கூடியதாக வழக்கு போட்டால் அத்தனை அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்கு போட வேண்டியிருக்கும் என்று கூறினார்.

Related Stories: