மொத்த தொற்று 4.28 லட்சமாக உயர்வு தமிழகத்தில் ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா: சென்னையில் 1,150 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று 5,956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1,150 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் கொரோனா தொற்று 4.28 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. கடந்த 30 நாட்களாக தினசரி 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று 6 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் நேற்று மீண்டும் தினசரி தொற்று 5 ஆயிரத்திற்கு வந்தது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்து வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் நேற்று 75,100 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,956 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 1,150 பேர், செங்கல்பட்டில் 347 பேர், திருவள்ளூரில் 299 பேர், காஞ்சிபுரத்தில் 189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 41 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,533 பேர் ஆண்கள். 2,423 பேர் பெண்கள். தற்போது வரை 2 லட்சத்து 58 ஆயிரத்து 370 ஆண்கள், 1 லட்சத்தி 69 ஆயிரத்து 642 பேர் பெண்கள், 29 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 6008 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3 லட்சத்து 68 ஆயிரத்து 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 52 ஆயிரத்து 578 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

நேற்று மட்டும் 91 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 19 பேர், கோவையில் 14 பேர், வேலூர், கன்னியாகுமரியில் 8 பேர் என்று மொத்தம் 91 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 10 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு மட்டும் மரணம் அடைந்துள்ளனர். 81 பேர் இணை நோய் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர். இதில் 47 மரணங்கள் அரசு, ரயில்வே, இஎஸ்ஐ உள்ளிட்ட மருத்துவமனைகளிலும், 34 தனியார் மருத்துவமனைகளிலும் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: