தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளிடம் அலட்சியம் காட்டுவதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் புகார்!!!

சென்னை:  தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் கால தாமதமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் விளக்கமளித்துள்ளார்.  தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் கொடிய உயிர்கொல்லி வைரசுக்கு பலரும் பலியாகி வருகின்றனர். இதற்கிடையில் சில மருத்துவமனைகளில் அபாயகட்டத்தில் நோயாளிகள் இடமாற்றம் செய்யப்படுவதால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனைகளும் ஏராளமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிகவும் அபாயகரமான கட்டத்தில், நள்ளிரவு நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் கொரோனா நோயாளிகளை அனுப்பப்படுவதால், காப்பாற்றுவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார். எனவே முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்னர் கொரோனா நோயாளிகளை தனியார் மருத்துவமனையிலிருந்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினால், உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: