இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை...!! பா.ஜ.க. அரசு மீது காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

டெல்லி:  இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பெருந்தொற்று கால பொருளாதார நெருக்கடி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள ராகுல் காந்தி,  நாடு எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடியின் உண்மை நிலை உறுதியாகி இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும் அமைப்புசாரா தொழில்களை பாஜக அரசு அழித்து  வருவதாக அவர் விமர்சனம் செய்திருக்கிறார்.

கடந்த 2008ம் ஆண்டு பொருளாதார மந்த நிலையால் உலக நாடுகளே ஆட்டம் கண்டபோது, இந்தியாவில் பாதிப்பு ஏற்படாததற்கு அமைப்புசாரா தொழில்கள் வலுவாக இருந்ததே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி,எஸ்.டி., போன்றவற்றால் ஏற்கனவே நிலைகுலைந்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கால் அடிமையாக்கப்பட்டு வருவதாக கூறியிருக்கிறார். மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு அமைப்புசாரா தொழில்களை நசுக்குவதற்காகவே எடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுப்பியுள்ள ராகுல், அனைத்து மக்களும் இதற்கு எதிராக போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: