மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக மொகரம் கொண்டாடிய இந்துக்கள்: பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே முதுவந்திடலில் பாத்திமா பள்ளிவாசல் உள்ளது. இதனை பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் கட்டினர். தற்போது முதுவன்திடலில் ஒரு முஸ்லிம் குடும்பம் கூட இல்லை. ஆனாலும் கிராமத்தில் வாழும் இந்து மக்கள், பாத்திமாவை தங்களின் இஷ்ட தெய்வமாக நினைத்து பள்ளிவாசலில் வழிபட்டு வருகின்றனர். இக்கிராம மக்கள் மொகரம் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே காப்புக்கட்டி விரதம் இருக்கின்றனர். பள்ளிவாசலுக்கு முன்பு அகலமான குழி வெட்டி தீ மூட்டி பூக்குழி இறங்குவது வழக்கம். மொகரம் பண்டிகையையொட்டி, நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆண்கள் மட்டும் பூக்குழிக்குள் இறங்கினர். பின்னர் பாத்திமாவை வணங்கி விரதம் முடித்தனர். பெண்கள் தலையில் ஈரச்சேலையை போர்த்தி தீக்கங்குகளை அள்ளி தலையில் கொட்டினர். இதனை பூ மெழுகுதல் எனக் கூறுகின்றனர். 

Related Stories: