பணியின் போது உயிரிழந்த ஆயுதபடை காவலர் பிரபு குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: பணியின் போது உயிரிழந்த ஆயுதபடை காவலர் பிரபு குடும்பத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். திருப்பூாட மாவட்டத்தில் பணியின் போது ஆயுத படை காவலர் பிரபு உயிரிழந்தார். சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற லாரியை மடக்கியபோது பிரபு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் பிரபுவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும் தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் சோதனைச்சாவடியில் நேற்று நள்ளிரவில் கன்டெய்னர் லாரி ஒன்று நிற்காமல் தப்பியுள்ளது. இதனால் காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை சோதனைச்சாவடியில் அந்த லாரியை மடக்கிப் பிடிக்க காவலர்கள் முயன்றனர்.

ஆனால் அங்கும் லாரி நிற்காமல் சென்றதால் போலீசார் சந்தேகமடைந்தனர். ஆயுதப்படை காவலர் பிரபு என்பவர் லாரியை மடக்கிப் பிடிக்க இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளார். முந்திச் செல்ல முயன்ற போது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், காவலர் தலை நசுங்கி உயிரிழந்தார். குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்ப முயன்ற பரமக்குடியைச் சேர்ந்த ஓட்டுநர் பாஸ்கரை ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் கைது செய்தனர்.

Related Stories: