பந்தலூர் அருகே தேயிலைத்தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்

பந்தலூர்:பந்தலூர் அருகே மேங்கொரேஞ் தேயிலைத்தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர்சுற்றுவட்டார பகுதியில் சமீபக காலமாக பல்வேறு இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று சேரம்பாடி டேன் டீ தேயிலைத் தோட்டம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 16 யானைகள், பந்தலூர் சேரம்பாடி செல்லும் நெடுஞ்சாலையை கடந்து  மேங்கொரேஞ் தனியார் தேயிலைத்தோட்டம் பகுதியில் முகாமிட்டு உணவு உட்கொண்டது. இதனால் பொதுமக்கள், தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தேவாலா வனச்சரகர் கணேசன், வனக்காப்பாளர் லூயிஸ் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலையின் இருபுறமும் செல்லும் வாகனங்களை நிறுத்தி, யானை கூட்டம் சாலையை கடந்து செல்லும் வரை பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கினர்.வனத்துறை கூறுகையில், ‘‘யானைகள் எப்போது வேண்டுமென்றாலும் நெடுஞ்சாலையை கடந்து செல்லலாம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

Related Stories: