திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலை: திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலில் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக  ஔிபரப்பப்பட்டு வருகிறது.

பக்தர்கள் https://www.youtube.com/c/Thiyagarajaswamy Vadivudailyamman TempleOfficial  என்ற யூடியூப் சேனல் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி அருள் பெறலாம். மேற்படி யூடியூப் சேனலை பதிவிறக்கம் மற்றும் ஷேர் செய்யவும். மேலும் இந்த தகவலை தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை நேரலையில் கண்டு இறைவன் அருள் பெறவும். இவ்வாறு திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: