இன்று முழு ஊரடங்கு எதிரொலி இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்: காற்றில் பறந்த தனிமனித இடைவெளி

சென்னை: இன்று முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான கடைகளில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றைத் தடுக்க அரசு நிர்வாகமும், கடை உரிமையாளர்களும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்றே மளிகை கடைகள், காய்கறி சந்தைகள், இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கிவிடுகிறது.

குறிப்பாக சென்னையில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளில் நேற்று மாலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கொரோனா நோய் தொற்றின் அச்சம் குறித்து மக்கள் தான் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். காசிமேடு, சிந்தாதிரிபேட்டை, வானகரம் போன்ற மீன் மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. போலீசார் சமூக இடைவெளியை பின்பற்ற சொல்லி வலியுறுத்தியும் மக்கள் பின்பற்றுவதில்லை. இதனால் தொற்று பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Related Stories: