இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று: கிண்டி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகிறது. கடந்த வாரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர் கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல், இருமல் காரணமாக அவதிக்கப்பட்டு வந்த நிலையில் 20ம் தேதி வியாழக்கிழமை இரவு சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் 5 நாள் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினர்.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய தலைவர்களில் ஒருவரும், சிறந்த தமிழ் இலக்கிய ஆய்வாளரும், எழுத்தாளருமான சி.மகேந்திரனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைபடுத்திக் கொண்டார். இந்நிலையில் சோதனையின் முடிவுகள் நேற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: