சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் மகனை பட்டப்பகலில் கடத்தி சென்ற மர்ம கும்பல்: சி.சி.டி.வி. காட்சி மூலம் ஒரேநாளில் சிறுவனை மீட்டு போலீசார் அதிரடி ...!!!

சென்னை:  சென்னை அருகே பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபரின் மகன் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள சூழலில் ஊரடங்களை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை  பணத்திற்காக கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி விட்டது. அந்த வகையில் தற்போது பணத்திற்காக சில மரம நபர்கள், தாம்பரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் மகனை கடத்தியுள்ளனர். இவை அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த முடிச்சூர் மதனபுரம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் 16 வயது மகன் நவ ஜீவன் என்பவரே கடத்தப்பட்டவராவார்.

இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த நவ ஜீவனை தடுத்து நிறுத்திய 2 இளைஞர்கள், அவனிடம் பேச்சுக்கொடுத்தபடியே, தயாராக நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் பட்டப்பகலில் நடந்த கடத்தல் அருகிலிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருக்கிறது. பின்னர் இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பீர்க்கன்கரணை போலீசார், மறைமலர் அருகே கடத்தல் கும்பலை மடக்கி, நவ ஜீவனை மீட்டனர். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் கடத்தல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: