கிராமப்புற மாணவர்களுக்காக 300 மணி நேர வீடியோ வகுப்புகள்

சென்னை: கிராமபுற மாணவர்களுக்காக 300 மணி நேர வீடியோ வகுப்புகள் நாளை முதல் ஒளிபரப்பப்படும். இதை சென்னை ஐஐடி ஒருங்கிணைத்துள்ளது. ஊரடங்கால் கல்லூரிகளுக்கு வர இயலாத நிலை உள்ளதால், கிராமப்புற மாணவர்களுககு வீடியோவில் பாடங்களை பதிவு செய்ய மத்திய பல்கலைகழக  பேராசிரியர்கள் மற்றும் இந்திய கல்வி அமைச்சகம் சார்பாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 300 மணி நேர வீடியோ வகுப்புகள் தேசிய பல்கலைகழக பேராசியர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான இந்த முயற்சியை சென்னை ஐஐடி ஒருங்கிணைத்துள்ளது. இந்த வீடியோக்கள் நாளை முதல் இம்மாத இறுதி வரை தேசிய கல்வி சேனல்களில் முழுநேரமும் ஒளிபரப்படும்.

Related Stories: