ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரிக்கு கொரோனா

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ நிலைய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ராஜிவ் காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் போன்றவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தனர். மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ நிலைய அதிகாரிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், இருமல், சளி போன்று கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதையடுத்து சோதனையின் முடிவுகள் நேற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அவர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: