செப்டம்பர் மாத இறுதிக்குள் காஞ்சி புதிய ரயில் நிலைய மேம்பால பணி முடியும்: திமுக எம்எல்ஏவிடம் ரயில்வே நிர்வாகம் உறுதி

காஞ்சிபுரம்,: காஞ்சிபுரத்தில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, புதிய ரயில் நிலையம் பகுதியில் ரயில்வே மேம்பால பணி தொடங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள காலத்தை பயன்படுத்தி, ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமசுக்கு, காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் கடிதம் மூலமாக கோரிக்கை விடுத்தார்.

இதை தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், தெற்கு ரயில்வே கட்டுமானப் பிரிவு தலைமை பொறியாளர், ரயில்வே மேம்பாலப் பகுதியை ஆய்வு செய்து இணைப்பு பாலப்பணி செப்டம்பர் மாத இறுதிக்குள் முடித்துத் தரப்படும் என எம்எல்ஏ வக்கீல் எழிலரசனுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். ரயில்வே பால இணைப்பு பணி நிறைவடைந்தால், காஞ்சி மக்களின் நீண்டகால கோரிக்கையான மேம்பாலம் வழி தடையில்லா போக்குவரத்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: