முல்லை பெரியாறு நீர்மட்டதை குறைக்க கோரும் வழக்கு!: சந்தேகங்கள் ஆதாரமற்றவை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்..!!

டெல்லி: முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரளாவை சேர்ந்த ரசல் ஜாய் என்பவர் எழுப்பியுள்ள சந்தேகங்கள் ஆதாரமற்றவை என்று மத்திய நீர்வளத்துறை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பருவமழை காலங்களில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை கருதி நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 130 அடியாக குறைக்க உத்தரவிடக்கோரி கேரளாவை சேர்ந்த ரசல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று நீதிபதி ஏ.எம். கான்கில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய நீர்வளத்துறை ஆணையம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், அணையின் தற்போதைய நீர்மட்டம் 130 அடியாக இருப்பதையும், 10 ஆண்டுகளாக அதன் சராசரி நீர்மட்டம் 123.21 அடியாக உள்ளத்தையும் சுட்டிக்காட்டினார். அணையின் பாதுகாப்பு தொடர்பாக மனுதாரர் குறிப்பிட்டுள்ள தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை என்று அவர் தெரிவித்தார்.

மேலும் சந்தேகங்கள் ஆதாரமற்றவை எனவும் அவர் குறிப்பிட்டார். அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்கள் தொலைந்துவிட்டதால் அவற்றின் நகல்களை பெற மூன்று வார கால அவகாசம் அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வார காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: