கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் 2ம் கட்ட பரிசோதனை இந்தியாவில் தொடக்கம் ; ராஜிவ் காந்தி, ராமச்சந்திரா மருத்துவமனைகளிலும் தடுப்பூசி சோதனை!!

சென்னை : ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டின் இரண்டாம் கட்ட மனித பரிசோதனை இன்று புனேவில் உள்ள பாரதி வித்யாபீட மருத்துவக் கல்லூரியில் துவங்க உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் பெற்றுள்ளது. இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருக்றது. மொத்தம் 3 கட்டங்களாக மனிதர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ய திட்டமிடப்படிருந்தது.

இதையடுத்து, மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் இந்த தடுப்பூசி முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 2 மற்றும் 3ம் கட்டமாக மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு(டிசிஜிஐ) சீரம் இன்டிடியுட் நிறுவனத்திற்கு அனுமதியளித்தது. அதன்படி, இந்தியாவில் உள்ள 17 மருத்துவமனைகளில் 2ம் கட்ட பரிசோதனை நடைபெற உள்ளது. 2ம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள தமிழகத்தில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இரண்டாம் கட்ட மனித பரிசோதனை இன்று புனேவில் உள்ள பாரதி வித்யாபீட மருத்துவக் கல்லூரியில் தொடங்க உள்ளது. இந்த மருந்து 1600 பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த சோதனையில் 18 வயதுடையவர்கள் பங்கேற்பர். 0.5 மில்லி அளவில் முதல் நாள் மருந்தின் டோஸ் வழங்கப்படும். அதன் பின்னர் 29வது நாள் இரண்டாவது டோஸ் மருந்து அதே அளவில் செலுத்தப்படும். இந்த மருந்து டி செல்லை தூண்டி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பு மருந்து சோதனை வழங்கப்படாது.

Related Stories: