காங்கிரசில் எல்லாம் சரியாக உள்ளது என்று சொல்ல முடியாது.. சில கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும் : காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து!!

டெல்லி:  காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் அனுப்பிய மூத்த தலைவர்கள், டெல்லியில் நள்ளிரவில் குலாம்நபி ஆசாத் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் தேவை என்று மூத்த தலைவர்கள் 23 பேர் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பினர். இதைத்தொடர்ந்து அந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று கூடி ஆலோசனையில் ஈடுபட்டது. இறுதியில் சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே தலைமைக்கு கடிதம் அனுப்பிய மூத்த தலைவர்களுக்கும் பாரதிய ஜனதாவிற்கும் இடையே தொடர்பிருப்பதாக சர்ச்சை வெடித்தது.

ராகுல் விலக்கத்தை அடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்தாலும், காங்கிரசில் சோனியா ஆதரவாளர்கள், அதிருப்தியாளர்கள் என்று இருதரப்பு மோதல்  நீடிப்பது தெரியவந்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் அனுப்பிய  மூத்த தலைவர்கள் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டத்திற்கு பின்னர், குலாம்நபி ஆசாத் வீட்டில் கூடி நள்ளிரவில் ஆலோசனையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த அந்த கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் கடிதம் அனுப்பிய தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சோனியா ஆதரவு தலைவர்களான அம்பிகா சோனி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்தும், காரிய கமிட்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அவர்கள் தனியாக ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே மழை ஓய்ந்தாலும், தூவானம் தொடர்கிறது என்ற நிலையே காங்கிரசில் நிலவுகிறது.

Related Stories: