பொதுத்துறை நிறுவன பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்று வரை பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. மத்திய அரசு பணிகளில் ஓபிசிகளின் பிரதிநிதித்துவம் 20 சதவீதத்துக்கும் கூடுதலாக இருப்பதாக மத்திய அரசு கூறினாலும் கூட, உண்மையான ஓபிசி பிரதிநிதித்துவம் இன்னும் 10 சதவீதத்தை கூட தாண்டவில்லை. மத்திய அரசு பணிகளில் ஓபிசிகளின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட மறுப்பதற்கு காரணம், ஓபிசிகளுக்கு இழைக்கப்படும் துரோகம் வெளிப்பட்டுவிட கூடாது ஓஎன்ஜிசி நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட துரோகம் மட்டும்தான் இப்போது வெளியாகியிருக்கிறது. அனைத்து துறைகளில் ஓபிசிக்கள் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய, மத்திய அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவன பணிகளில் ஒவ்வொரு நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

Related Stories: