வரிசையாக பண்டிகைகள் வர இருப்பதால் கோயம்பேடு மார்க்கெட் திறக்கும் தேதியை உடனே அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு வணிகர்கள் மீண்டும் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், சென்னை மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம், கோயம்பேடு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர்.

* அந்த மனுவில் கூறி இருப்பதாவது:

தற்போது பண்டிகை காலம் வர இருக்கின்ற நிலைகளில் பொதுமக்களின் அவசியம் கருதியும், வணிகர்களின் வாழ்வாதாரம் கருதியும் வணிகர்களுக்கே சொந்தமான கோயம்பேடு காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய வணிக வளாகத்தை சுத்தம் சுகாதாரத்தை மேம்படுத்தி மீண்டும் திறந்திடும் தேதியை உடனே அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.

Related Stories: