கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து 27 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வருகிற 27 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். கொரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நேரடியாக சென்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வருகின்ற 27ஆம் தேதி காலை கடலூர் மாவட்டத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அதையடுத்து அன்று மதியம் நாகப்பட்டினம் மாவட்டத்திலும் முதலமைச்சர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதனைத் தொடர்ந்து வருகின்ற 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து அன்று மதியம் தஞ்சாவூர் மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் கட்டுப்படுத்த பகுதிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.  ஏற்கனவே கடந்த 6ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு நடத்தினார்.

Related Stories: