தமிழ்நாட்டில் 11ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை துவக்கம் - அரசு பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை

சென்னை:  தமிழகத்தில் அரசு பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 11ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. மாணவர் சேர்க்கையின்போது 10ம் வகுப்பில் பயின்ற மாணவர்கள் மீண்டும் அதே பள்ளிகளில் சேர முன்னுரிமை வழங்க வேண்டும், மதிப்பெண்ணை காரணம் காட்டி சேர்க்கையை மறுக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 11ம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. முதல் நாளிலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இதனால் நீண்ட நாட்களுக்கு பின் மாணவர்கள் சந்தித்து கொண்டதால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் தங்களது விருப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சேர்க்கை முடிந்த உடனேயே மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைத்தொடர்ந்து மாணவர்கள் புத்தகங்களை மிகுந்த உற்சாகத்துடன் வாங்கி செல்கின்றனர். கொரோனா இன்னல்களுக்கிடையில் இதுபோன்ற நிகழ்வுகள் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: