குற்றப்பின்னணி குறித்து ஆராயாமல் வேலை கொடுத்தால், இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்க அதிக வாய்ப்பு!: ஐகோர்ட் நீதிபதி காட்டம்!

சென்னை: குற்றப்பின்னணி குறித்து விசாரிக்காமல் காவல்துறையில் வேலை கொடுத்தால் மற்றொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்க வாய்ப்பிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டதை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் 2016ம் ஆண்டு தன் மீது பதிவான மிரட்டல் வழக்கு ஒன்றில் புகார்தாரருடன் சமரசம் செய்துக்கொள்வதாக கூறியும், மாஜிஸ்திரேட் ஏற்காததால் தனக்கு காவலர் பணி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே விழுப்புரம் எஸ்.பி.-யின் உத்தரவை ரத்து செய்து தனக்கு பணி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, வழக்கில் இருந்து மனுதாரர் சந்தேகத்தின் பலனாகத்தான் விடுதலை செய்யப்பட்டார் என்றும், இவருக்கு வேலை வழங்குவது அதிகாரிகளின் விருப்பமே தவிர, அதில் மனுதாரர் உரிமைகோர முடியாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருவாதங்களையும் கேட்டிருந்த நீதிபதி, மனுதாரர் விண்ணப்பம் செய்யும் போது வழக்கு விவரத்தை குறிப்பிடாமல், சான்றிதழ சரிபார்ப்பின் போது தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து, ஒழுக்கம் சார்ந்த காவல்துறை பணிக்கு, குற்றவழக்கில் சிக்கிய மனுதாரர் உரிமைகோர முடியாது என வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றப்பின்னணி குறித்து ஆராயாமல் காவல்துறையில் வேலை கொடுத்தால் இன்னொரு சாத்தான்குளம் சம்பவம் நடக்க அதிக வாய்ப்பிருப்பதாக நீதிபதி தனது கருத்தை பதிவு செய்தார்.

Related Stories: