கவுரவமான பணி ஓய்வா?: கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் கடிதம்

சென்னை: பணியில் கடந்த 2002ம் ஆண்டுக்கு முன்னர் சேர்ந்துள்ள கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததால் கவுரவமான ஓய்வாக கருத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் வெங்கடாசலபதி பதிவாளர் எல்.சுப்ரமணியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2002 டிசம்பருக்கு முன்பாக பணிக்கு சேர்ந்துள்ள அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டுக்கு முன்னர் பணிக்கு சேர்ந்துள்ள கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காததினால், சமூகத்தில் கவுரவமான ஓய்வாக கருத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2002 டிசம்பருக்குள் பணிக்கு சேர்ந்து 1.4.2021க்கு பின்னர் ஓய்வு பெறும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அந்தெந்த கூட்டுறவு சங்க பொது நிதி  அல்லது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் புனரமைப்பு நிதி மூலம் எல்ஐசி ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வூதியம் பெறும் முறையினை அமல்படுத்த வேண்டும்.அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போல் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கும் வரை அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதினை சங்க பணியாளர்களுக்கு பொருத்தாமல் நிறுத்தி வைத்து ஓய்வு முறையினை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: