தமிழகத்தை இறுக்கி பிடிக்கும் கொரோனா!: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு தொற்று பாதிப்பு உறுதி..!!

ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று தன்னுடைய உடல்நிலையை பரிசோதித்த போது 25 சதவீதம் அளவிற்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக கொரோனா சிகிச்சைக்கு தேவையான உணவு முறைகள் மற்றும் கபசுர குடிநீர் உள்ளிட்டவை எடுத்துக்கொண்டு அவர் தனது இல்லத்தில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில், முதல் கட்டமாக மார்ச் மாதத்தில் வந்த கொரோனா தொற்று பாதிப்பை காட்டிலும், இரண்டாவது அலையாக தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொரோனாவின் வீரியம் என்பது சற்று அதிகமாகவே காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் தற்போது வரை 1804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 780க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட அளவில் 29 பேர் உயிரிழந்திருக்கக்கூடிய சூழ்நிலையில், கொரோனா தொற்று என்பது கிராமப்பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்புகளை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

குறிப்பாக அதிக பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு இவர் நேரடியாக சென்று, தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வந்தார். இதுபோன்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது ஆட்சியருக்கு அறிகுறியற்ற மிக குறைந்த அளவு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தொடர்ந்து அறிகுறி தென்படும் பட்சத்தில் அவருக்கு அடுத்தகட்ட சிகிச்சையோ அல்லது மருத்துவமனைக்கு செல்லும் நிலையோ ஏற்படும்.

Related Stories: