பிஇ, பிடெக் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியாகிறது: அதிகாரிகள் தகவல்

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, ஆன்லைன் மூலம் ஜூலை 15ம் தேதி முதல் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கான சான்றுகளை ஆகஸ்ட் 20ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று மாலையுடன் சான்று பதிவேற்றம் முடிந்தது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் பொறியியல் கவுன்சலிங்கை நடத்த உள்ளது.

இதையடுத்து தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, ரேண்டம் எண்களை இன்று காலை வெளியிடுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து சேவை மையங்களில் மாணவர்களின் அசல் சான்றுகள் 24ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை சரிபார்க்கப்படும். இதில் பொதுப்பிரிவு மற்றும் தொழில் பிரிவு மாணவர்களும் பங்கேற்று தங்கள் அசல் சான்றுகளை நேரில் சமர்ப்பித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். செப்டம்பர் 7ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர்களுக்கான கவுன்சலிங் செப்டம்பர் 10ம் தேதி தொடங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: