இந்தியாவின் மிகவும் தூய்மையான நகரங்களின் பட்டியல் வெளியீடு: தொடர்ந்து 4-வது முறையாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் தேர்வு.!!!

இந்தூர்: இந்தியாவின் மிகவும் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது. இதன்படி, ‘ஸ்வச் மஹோத்ஸவ்’ என்ற மெய்நிகர் திட்டத்தினை 2016-ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி, தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பினை மத்திய அரசு நடத்தி பட்டியல் தயார் செய்தது. மொத்தம் 129 சிறந்த நகரங்கள் மற்றும் மாநிலங்கள் வழங்கப்பட்டன. ஸ்வச் சர்வேஷன் 2020, 4,242  நகரங்கள், 62 கன்டோன்மென்ட் போர்டுகள் மற்றும் 92 கங்கா நகரங்களை உள்ளடக்கியது. இந்த ஆய்வு 28 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், நாட்டின் தூய்மையான நகராக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4வது ஆண்டாக நாட்டின்  தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகர் பிடித்துள்ளது. 3-வது இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை பிடித்துள்ளது. பட்டியலில், தமிழகத்தில் கோவை நகரம் 40-வது இடம் பிடித்துள்ளது. சென்னை  45-வது இடத்திலும், மதுரை 42-வது இடத்திலும் உள்ளது.

இந்தியாவின் தூய்மையான நகரம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுவது 2020- இந்த பட்டியல் 5-வது முறையாகும். முதன்முறையாக 2016-ம் ஆண்டு இந்தியாவின் தூய்மையான நகரத்திற்கான விருதை கர்நாடகா மாநிலம் மைசூரு வென்றது.  தற்போது, இந்தூர் தொடர்ந்து 4-வது ஆண்டுகளாக (2017,2018, 2019,2020) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய வீட்டுவசதி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேட்டி:

இந்தூர் தேர்வு செய்யப்பட்டது குறித்து மத்திய வீட்டுவசதி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவிக்கையில், “ஜப்பானிய தூதுக்குழுவின் உறுப்பினருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தூருக்கு விஜயம் செய்தேன். நாங்கள் நகரத்தை அடைந்தபோது, ​​அவர் ஜப்பானியர்கள் இந்தூரில் பல்வேறு இடங்களுக்குச் செல்வதைக் கண்டேன். நான் அவரிடம் ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு ‘நான் அசுத்தத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன், ஆனால் முடியவில்லை’ என்றார். நகரத்தின் சாதனைக்கு இதைவிட பெரிய சாட்சியம் இருக்கக்கூடும் என்று நான் நினைக்கவில்லை. ” இந்தூர் விருதை வென்ற பிறகு அவர் இதை சிவ்ராஜ் சிங் சவுகானிடம் கூறினார்.

Related Stories: