திருப்போரூர் ஒன்றியத்தில் தலைவர்களின் சிலைகளுக்கு கம்பி வலை பாதுகாப்பு பணிகள் தொடக்கம்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு, கம்பி வலை பாதுகாப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள தலைவர்கள் சிலைகளை, மதவாத அமைப்புகள் காவி பெயின்ட் ஊற்றி சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் சட்டம்  ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மார்பளவு மற்றும் ஆளுயர சிலைகளை பாதுகாப்பு கம்பி வேலி அமைத்து பாதுகாக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய திருப்போரூர், பையனூர், சிறுதாவூர், தண்டலம், மாம்பாக்கம், கேளம்பாக்கம், மேலக்கோட்டையூர், கோவளம் ஆகிய இடங்களில் பெரியார், அண்ணா, அம்பேத்கர், எம்ஜிஆர், காமராஜர் உள்பட பல்வேறு தலைவர்களின் சிலைகள் உள்ளன. இதில் சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு கம்பிவேலி போடப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து, பாதுகாப்பு வேலி இல்லாத சிலைகளுக்கு, பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.

Related Stories: