சென்னை வடபழனியில் மாமூல் வாங்கும் காவல் ஆய்வாளர்...!! அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா?...சமூக ஆர்வலர்கள் கேள்வி!!!

சென்னை:  சென்னை வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாமூல் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வீடியோவில் சிக்கி இருப்பவர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆவார். இவர் சென்னை மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இதனையடுத்து வடபழனியில் நடக்கும் சட்டவிரோதமான மது விற்பனை, சூதாட்ட கிளப் மற்றும் முறைகேடாக நடக்கும் மசாஜ் சென்டர்களிலிருந்து இவர் தினமும் மாமூல் வாங்குகிறார் என்பது குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் தன்னிடம் வரும் புகார்களுக்கு வழக்கு பதியாமல் ஒரு தரப்பிடமிருந்து பணத்தை அதிகளவு பெற்றுக்கொண்டு, எதிர் தரப்பிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும் இவர் மீது புகார் எழுந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் மாமூல் வாங்குவதற்காக தனி ஒரு இடத்தை பயன்படுத்தி வருகிறார். அதாவது கொரோனா காரணமாக திருமண மண்டபங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், வடபழனி சன்னதி தெருவில் அமைந்துள்ள திருமண மண்டபத்திற்கு தினந்தோறும் சென்று இவர் மாமூல் வசூலித்து வந்துள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இவை பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 ஒரு சில காவலர்களின் அத்துமீறிய செயல்களால், அவை மற்ற காவலர்களையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பொதுமக்களிடையே காவலர்கள் மீதான  மதிப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இதனையடுத்து உரிய ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் லஞ்ச செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கிடையில் ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரின் பெயரை கூறி மிரட்டும் இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏற்கனவே பெண் இன்ஸ்பெக்டர் மீது குப்பையை கொட்டி சர்ச்சைக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: