எம்ஜிஆருக்கு பிறகு திரையுலக சர்க்கரவர்த்தியாக கமலஹாசன் இருந்தாலும், அரசியலில் எல்கேஜி தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை : தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடர்ச்சியான கருத்துக்களை அரசியல் தளத்தில் கூறி வருபவர்.அண்மையில் அதிமுக தலைமையிலான அடுத்த முதல்வரை, தேர்தல் வெற்றிக்கு பின், சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி தேர்ந்தெடுப்பார்கள் என்று அவர் பேசிய கருத்து பரபரப்புக்குள்ளானது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘எங்கள், கட்சிக்குள் பேதமே இல்லை. ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. தலைவர்களை நம்பியில்லை; தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது.கூட்டணி என்றால் தேர்தல் நேரத்தில் ஒன்றாக இணைந்து மக்களை சந்திப்பது மட்டும் தான். பிற கட்சி கொள்கைகளை ஏற்று எங்கள் கட்சி கொள்கைகளை விட்டுத்தரமாட்டோம்.

பா.ஜ.க கை காட்டும் கட்சி அடுத்து ஆட்சியமைக்கும் என்பது அவர்கள் கட்சியின் கருத்து. எங்கள் பாதை தெளிவான பாதை. தோழமை கட்சியோடு இணைந்து செயல்படுகிறோம். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு இல்லை. எம்ஜிஆர்க்கு பிறகு திரையுலக சர்க்கரவர்த்தியாக கமலஹாசன் இருந்தாலும், அரசியலில் தேர்ந்தவரில்லை. திரையுலகில் கமலஹாசன் ஜாம்பவான், அரசியலில் எல்கேஜி.

மதுரையின் கட்டமைப்பை பெருக்க 2-வது தலைநகராக்க வேண்டும். தகவல் தொழில் நுட்ப நகர், எய்ம்ஸ் என பலமான கட்டமைப்பை மதுரை பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் பெற்று வருகிறது. முதல்வர் பல சாதனைகளை செய்துள்ளார். அதுபோல மதுரையை தலைநகராக்கி சாதனை புரிய வேண்டும், என்றார்.

Related Stories: