கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும்: செங்கொடி சங்கம் ஆணையரிடம் மனு

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் வலியுறுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்காலிக, மதிப்பூதியம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 16 பேர் மற்றும் 13 ஆயிரம் களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சுதந்தர தின விழாவில் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், ஒப்பந்த பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்தும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதற்கான பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சுனிவாசுலு, மாநகராட்சி ஆணையர் மற்றும் சுகாதாரண இணை ஆணையருக்கு அளித்துள்ள மனு அளித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: